Tag Archives: Bank Exam Coaching in Chennai

இந்தியா வந்து சேர்ந்தது ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா

ரஷியாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள விமானந்தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா, கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வார் தளத்திற்கு ஜனவரி 7ல் வந்து சேர்ந்தது.

 

ரஷியாவிடம் இருந்து ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க் கப்பலை வாங்குவதற்காக, 2004 ஆம் ஆண்டு அந்நாட்டுடன் இந்தியா உடன்பாடு செய்து கொண்டது. அதன்பிறகு நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், அதன் விலை 2.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

 

ஏற்கெனவே இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். வீராட் என்னும் விமானந்தாங்கி போர் கப்பல் உள்ளது. அத்துடன் விக்ரமாதித்யா விமானந்தாங்கி போர் கப்பலும் இணைந்தால் இந்திய கடற்படையின் பலம் பலமடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

 

For more details please visit http://www.suracoaching.com/news_events.php?id=77

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை கலெக்டர் உள்ளிட்ட 79 பணிகளுக்கான குரூப் -1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை கலெக்டர் உள்ளிட்ட 79 பணிகளுக்கான குரூப் –தேர்வு

2013 
டிசம்பர் மாத இறுதிக்குள் அறிவிப்பு


துணை கலெக்டர் உள்ளிட்ட 79 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இம்மாத இறுதிக்குள் (2013 டிசம்பர்) அறிவிக்கும் என்று தலைவர் ஏ. நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.

துணை கலெக்டர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகலாம்
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி அதில் அதிக மதிப்பெண் பெற்றால் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக சொந்த மாநிலத்தில் வேலை பார்க்கலாம். ஆனால் குரூப் –தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றால் துணை கலெக்டர் ஆக பணி அமர்த்தப்படுவார்கள். அவர்கள் சொந்த மாநிலத்திலேயே பணியாற்றலாம். பின்னர் அல்லது 10 வருடங்கள் கழித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகலாம்.

79 பணியிடங்களுக்கு அறிவிப்பு
அரசுப்பணியாளர் தேர்வாணையம் 12 லட்சம் பேர் எழுதிய குரூப்-தேர்வு முடிவை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன. ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் இந்த முடிவு வெளியிடப்படும்.

குரூப்-தேர்வு குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும். அனைத்து துறைகளில் இருந்தும் காலிப்பணியிடங்கள் கேட்கப்பட்டு அவர்களும் பதில் அனுப்பி உள்ளனர். மொத்தம் 79 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

துணை கலெக்டர் பணியிடம் – 3, கிராமப்புற மேம்பாட்டு அதிகாரிகள் பணியிடங்கள் – 10, வணிவரித்துறை உதவி ஆணையர்கள் பணியிடங்கள் – 33, துணை போலீஸ் சூப்பிரண்டென்ட் பணியிடங்கள் – 33 ஆக மொத்தம் 79 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் தேர்வு நடத்தப்படும். முதலில் முதல் நிலைதேர்வும் அதில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மெயின் தேர்வும் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

மெயின் தேர்விலும்நேர்முகத்தேர்விலும் சேர்த்துப் அதிக மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.