Link

வளர்ச்சிப் பாதையில் இந்தியா

வளர்ச்சிப் பாதையில் இந்தியா; 

நம்பிக்கை இழக்க வேண்டாம்!

வெளிநாடுவாழ் இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ’பிரவாசி பாரதிய திவஸ்12-ஆவது மாநாடு தில்லியில் ஜனவரி 8ந் தேதி தொடங்கியது. மாநாட்டில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் பங்கேற்றனர். மாநாட்டைத் தொடக்கிவைத்து பிரதமர் மன்மோகன் பேசியதாவது:
இந்தியாவின் வேகம் அண்மைக் காலமாக குறைந்து வருவதாக வெளிநாடுகளில் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் நிலவிவரும் சில அரசியல் சூழ்நிலைகளால் அத்தகைய கருத்து வெளியிடப்படுகிறது. தேர்தல் காலங்களில் இது போன்றக் கருத்துகள் பல்வேறு ஊகங்களுக்கு வலுசேர்க்கும். இந்த வேளையில், இந்தியர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு, நீதி; வலுவான பொருளாதார அடிப்படை; விரைவில் கிராமப்புறங்கள் முழுவதும் கல்வி, தொழில் உள்ளிட்ட அறிவு சார் ஆதாரங்கள், அகண்ட அலை வரிசை தொலைபேசி வசதி; வறுமையைக் குறைக்க நடவடிக்கை; வெளிப்படையான, நேர்மையான, பொறுப்புணர்வுமிக்க ஆளுகை ஆகியவை வழங்கப்படும் என்ற ஐந்து உறுதிமொழிகளை வழங்குகிறேன்.

விலைமதிப்பற்ற பங்களிப்பு: இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியர்களும், இந்திய வம்சாவளி இந்தியர்களும் அளித்து வரும் பங்களிப்பு விலைமதிப்பற்றது. இந்த ஆண்டு வெளிநாடுவாழ் இந்திய வம்சாவளியைக் சேர்ந்த இளம் தலைமுறையினர் பெருமளவில் மாநாட்டில் பங்கேற்றுள்ளது வரவேற்புக்குரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஒளிரும் இந்தியா மீது உலக நாடுகள் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் உள்ளன. அதை உணர்ந்து சர்வதேச அமைப்புகளில் முக்கியப் பொறுப்பை ஏற்க இந்தியா தயாராகி வருகிறது. அந்த நோக்கத்துடன் வெளிநாடுவாழ் இந்திய சமூகத்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவை இனி வரும் காலத்தில் மிகவும் ஆழமாக வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

http://www.suracoaching.com/news_events.php?id=79

Leave a comment